Friday, September 9, 2016

தயாரிப்பாளர், இயக்குனர்களின் செக்ஸ் தொல்லை : ஹீரோயின் பகிரங்க புகார்

தமிழில் உருவான கோலிசோடா கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. மும்பை நடிகை பிரியங்கா ஜெயின் ஹீரோயின். சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது திடுக் புகார் கூறினார். இதுபற்றி அவர் கூறியது: 2 வருடத்துக்கு முன் ரங்கி தரங்கா கன்னட படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினேன். அதன்பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது. கால்ஷீட் கேட்டு வந்த சில தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் என்னை செக்ஸ் உறவுக்கும் வரவேண்டும் என்று அழைத்தனர். மும்பையிலிருந்து வந்தவள் என்பதால் எதற்கும் தயாராக இருப்பேன் என எண்ணி விட்டார்கள்.
அதுபோல் பட வாய்ப்புகள் தேவையில்லை என்று மறுத்துவிட்டேன். இந்த விஷயத்தை கேள்விப்பட்டு எனது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் பெண்கள் பணியாற்றும் பல இடங்களில் இதுபோன்று தொந்தரவுக்கு ஆளாகி கொண்டிருப்பதை சொல்லி சமாதானப்படுத்தினேன். திரையுலகில் எல்லா தயாரிப்பாளரும், இயக்குனரும் இப்படி கிடையாது. நல்லவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். அவர்களிடம் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை யுடன் காத்திருந்தேன். கோலி சோடா ரீமேக் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு பிரியங்கா ஜெயின் கூறினார்

0 comments:

Post a Comment

 
http://go.ad2upapp.com/afu.php?id=787673