Saturday, September 10, 2016

ஃபேஸ்புக் கணக்கு முடக்கம் – நடிகை பானுஸ்ரீ அதிர்ச்சி

நடிகர், நடிகைகள் சிலரின் ஃபேஸ்புக் கணக்குகள் அவ்வப்போது முடக்கப்படுவதாகவும், வேறு யாரோ அதில் ஊடுருவி தவறான தகவல்களை வெளியிடுவதாகவும் அவ்வப்போது புகார்கள் எழுகின்றன. இப்போது மற்றொரு நடிகையின் கணக்கில் ஊடுருவல் நடந்துள்ளது. ‘உதயன்’, ‘விழி மூடி யோசித்தால்’, ‘சிம்பா’ படங்களில் நடித்திருப்பவர் பானுஸ்ரீ மெஹரா. தெலுங்கு, இந்தி, பஞ்சாபி படங்களிலும் நடித்துள்ளார். இவர் இணைய தளத்தில் ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி ரசிகர்களுடன் தொடர்பில் இருந்தார். சமீபத்தில் அவரது ஃபேஸ்புக் கணக்கை யாரோ ஒருவர் முடக்கி அதில் ஊடுருவி உள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த பானுஸ்ரீ, தான் வெளியிடாத தகவல்களை தவறாக யாரோ வெளியிட்டு வருவதாக புகார் கூறி இருக்கிறார்.தன்னுடைய ஃபேஸ்புக் முடக்கப்பட்டிருப்பது குறித்து ரசிகர்கள் தங்களது டுவிட்டர் பக்கங்களில் தகவல் வெளியிட்டு அதை மற்றவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.

0 comments:

Post a Comment

 
http://go.ad2upapp.com/afu.php?id=787673