Friday, September 9, 2016

கோலிவுட்டில் நடிகைகளால் சர்ச்சையாகும் ஆடை கலாச்சாரம்!

நடிகைகள் அளவிற்கு அவர்கள் அணியும் ஆடைகளும் சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன. சரியாகச் சொல்வதென்றால், ஆடையை முன்னுறுத்தி சர்ச்சைக்குள்ளான நடிகைகளே அதிகம். ஆடைகள் என்று வரும்போது, திரையில் அவர்கள் அணிந்துவரும் ஆடைகளை விட, நிஜத்தில் அவர்கள் அணியும் ஆடைகளே பிரச்சனையாக இருந்து வருகிறது. சினிமா விழாக்கள் என்றாலே குட்டை பாவாடை அணிந்து பலர் பங்கேற்பது வழக்கம். கவர்ச்சி நடிகைகள் மட்டுமின்றி முன்னணி கதாநாயகிகளும் இது போல் கவர்ச்சி ஆடை அணிந்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்புகளும் காட்டப்பட்டு வருகிறது. பொது நிகழ்ச்சியில் குட்டை பாவாடையுடன் வந்ததற்காக நமீதா, ஸ்ரேயா தொடங்கி மல்லிகா ஷெராவாத் வரை பலர் சர்ச்சைக்குள்ளாயினர். சிலர் மீது கலாச்சார மீறல் வழக்கும் தொடரப்பட்டது. நடிகைகள் பொது நிகழ்ச்சிகளில் அணிந்துவரும் உடை சிக்கனமாக, ஆபாசமாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக இருக்கிறது என்பது பொதுவான குற்றச்சாட்டு. இதனை முன்வைப்பவர்கள் இரு வகையினர். முதல் வகையினர் நடிகைகளின் உடைகளில் மட்டும் கவனம் செலுத்துபவர்கள் இல்லை. உலகமயமாக்கல் மற்றும் கலாச்சாரத்தால் தமிழர்களின் அடையாளங்கள் அழிந்து வருவதில் நிஜமான கவலை கொண்டவர்கள். நடிகைகளின் ஆடை குறைப்பு இவர்களின் கலாச்சார மீட்பின் ஒரு பகுதி. இரண்டாம் வகையினர், அழிந்துவரும் தமிழர் அடையாளங்கள் குறித்து எந்த கவலையும், புரிதலும் இல்லாதவர்கள். விளம்பரம் ஒன்றே இவர்களின் இலக்கு. நடிகைகளை விமர்சிப்பதன் வழியாக கிடைக்கும் விளம்பர வெளிச்சத்தில் தன்னை முன் நிறுத்தி கொள்பவர்கள். திரையில் நடிகைகளின் அரைகுறை நிர்வாணத்தை ரசித்துக் கொண்டே, பொது இடங்களில் அவர்களின் கால்வாசி நிர்வாணத்துக்கு முதலைக் கண்ணீர் வடிப்பவர். தங்களை தமிழ் கலாச்சார காவலர்களாக காட்டிக் கொள்வதே இவர்களின் ஒரே நோக்கம். சிவாஜி படவிழாவில் குட்டைப் பாவாடை அணிந்து வந்த ஸ்ரேயா, கால்மேல் கால்போட்டு அமர, பார்வையாளர் பகுதியிலிருந்து பெரும் கூச்சல் கிளம்பியது. முதல்வர், சூப்பர் ஸ்டார் போன்றவர்களின் முன்னால் ஒரு நடிகை கால் மேல் கால் போட்டு அமர்வதா? என கண்ட குரல் ஒலித்தது. இதனை கண்டித்தது, போலீசிலும் புகார் செய்யப்பட்டது. பின்னர் ஸ்ரேயா மன்னிப்பு கேட்டார். இப்போது மீண்டும் மேக்ஸிம் இதழுக்கு அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவருக்கு பல தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் சமீபகாலமாக நடிகை ஸ்ரீதேவி பொது நிகழ்ச்சிகளில் அரை குறை ஆடையுடன் வரத் தொடங்கினார். சமீபத்தில் மும்பையில் நடந்த பேஷன் ஷோ ஒன்றில் தனது மகளுடன் அரை குறை கவர்ச்சி ஆடையில் ஸ்ரீதேவி ஆடையுடன் வந்துள்ளார். இதற்கு அங்குள்ள மகளிர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்று ஆடை அணிந்து வருவதை அவர் தவிர்க்க வேண்டும் என்றும் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். இரண்டு பெண்களுக்கு தாயாக இருக்கும் ஸ்ரீதேவி தனது மூத்த மகளுக்கு பட வாய்ப்பு பெறவே இப்படி டிரஸ் செய்து கொள்கிறார் என்கிறது பாலிவுட் வட்டாரத்தில், ஸ்ரீ தேவியின் அரைகுறை ஆடைகள் பற்றி சர்ச்சையை கிளப்பியுள்ளது. நமீதாவுக்கு தேவையா இது ? நமீதாவும் கவர்ச்சி ஆடை அணிந்து விழாக்களுக்கு வருகிறார். இருக்கையில் அமர்ந்து இருக்கும் போது போட்டோ கிராபர்கள் படம் எடுப்பதை தவிர்க்க கால்கள் மேல் துண்டை போட்டு மறைத்துக் கொள்கிறார். இதற்காக துண்டு துணியை கையிலேயே கூடவே எடுத்து வருகிறார். இது பற்றி சிலரிடம் கருத்துகளை கேட்டோம். “தமிழகம் கலாசாரம் பண்பாட்டுக்கு முன்னோடியான மாநிலம். அதனால்தான் கற்புக்கரசியான கண்ணகிக்கு சிலை வைத்துள்ளோம். சினிமா என்றாலே கவர்ச்சிதான். இப்போதுள்ள இளைய தலைமுறையும் கவர்ச்சியைதான் பெரிதும் விரும்புகிறார்கள். இதனால் கலாச்சாரம் சீரழிந்துவிட்டது. குட்டை பாவாடை அணியும் நடிகைகளை நாங்கள் எதிர்க்கவில்லை. சினிமாவில் அது போல் அணியலாம். பலர் கூடும் பொது விழாக்களுக்கு அப்படி வருவது நல்லதல்ல. கவர்ச்சி உடையில் வருவதோடு மட்டும் நிறுத்தி கொள்ளாமல், கால் மேல் கால் போட்டு அனைவர் முன்னிலையிலும் உட்காருகிறார்கள். ஒரு படம் நடித்து வெளியாகும் முன்னே இப்படித்தான் செய்கிறார்கள். இது மிகவும் கண்டித்தக்கது. தமிழ் கலாச்சாரமான அழகான சேலையில் வரலாமே! இவர்களை பார்த்து பல பெண்களும் நாமும் இது போல் சேலை அணியலாமே என நினைப்பார்கள். இது போல் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர்களும், மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து வருகிறார்கள். இதை அவர்கள் தவிர்க்க வேண்டும். நான் பங்கேற்கும் பொதுகூட்டங்களில் இதை பல முறை எச்சரித்துவிட்டேன் என்கிறார் போலீஸ்&பொதுமக்கள் நல்லுறவு சங்கத்தின் செயலாளர் புஷ்பராணி. “நடிகர், நடிகைள் பலருக்கு ரோல்மாடலாக இருக்க வேண்டியவர்கள். படத்தில் நடிகர், நடிகைகள் பேசும் வசனங்களில் இருந்து, அவர்களது செய்கைகள், நடை, உடை பாவனைகள் வரை ரசிகர்களால் பின்பற்றபடுகிறது. எனவே அவர்கள் இது போன்ற கவர்ச்சி ஆடைகளை விழாக்களில் மட்டுல்ல, படங்களில் கூட கூடுமானவரை தவிர்க்கலாம். ஏனென்றால் சினிமாவும், சின்னத்திரை இன்றைக்கு மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.” என்கிறார் பெண்கள் விடுதி நடத்தும் சீதா.

0 comments:

Post a Comment

 
http://go.ad2upapp.com/afu.php?id=787673